கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி, சென்னையில் பெசண்ட் நகரில் பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகளை வழங்கினார்.
சென்னை பெசன்ட் நகரில் 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கி.மீ., என நான்கு பிரிவுகளில் மராத்தான் போட்டி நடைபெற்று. இதை விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு ,அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தனர். இதில் வெற்ற பெற்றவர்களுக்கு பரிசு தொகை மற்றும் நினைவுப் பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கில் கடந்த 2020-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
மாரத்தான் ஓட்டத்தின் பதிவுத்தொகையாக பெறப்பட்ட ரூ.1 கோடியே 20 லட்சத்து 69 ஆயிரத்து 980-ஐ சுகாதாரத்துறை செயலாளரிடம், முதலமைச்சர் வழங்கினர்.
இதில் பங்கேற்று மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. பங்கேற்றவர்களுக்கு நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.
கருணாநிதி நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து தி.மு.க. அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மரியாதனை செய்தனர்.
முன்னதாக, பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு முதலமைச்சர் பரிசுகளை வழங்கினார்.
மேலும், பெசன்ட் நகரில் கருணாநிதி சிலையையும் திறந்து வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு மு.க. ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் வளாகத்திலிருந்து கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி நடைபெற்றது. இதில் பொது மக்களும், தி.மு.க.வினரும் பங்கேற்றனர்.
அமைதிப் பேரணியின் இறுதியாக மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்