கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 72 வயது முதியவருக்கு, ஆயுட்கால சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது.


கரூர் மாவட்டம் இடையபட்டியை அடுத்த சேவப்பூரில் வசித்தவர் பழனியம்மாள். இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.


 




இந்நிலையில் பழனியம்மாளுக்கும், ராமசாமி (வயது 72) என்கிற மணி நாயக்கருக்கும் 20 ஆண்டு காலம்  பழக்கம் ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பழனியம்மாளின் உறவினர் சங்கர் என்பவர் அவரது வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இது ராமசாமிக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.


 


கடந்த 03.08.2021 அன்று பழனியம்மாளின் மகள் கொழுந்தாயி ஆடி 18 யை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அதற்கு அடுத்த நாள் அதிகாலை 1.30 மணியளவில் பழனியம்மாள் வீட்டிற்கு வந்த ராமசாமி, சங்கர் அவரது வீட்டில் தங்கி இருப்பது தொடர்பாக சண்டை போட்டுள்ளார்.







அப்போது ராமசாமி கெட்ட வார்த்தைகளால் திட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாளை கழுத்தில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். மகள் கொழுந்தாயி மற்றும் சங்கர் கண்ணெதிரே நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொழுந்தாயில் அதிகாலை 2.30 மணியளவில் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.


 


இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி ராமசாமிக்கு கெட்ட வார்த்தையால் திட்டிய குற்றத்திற்காக 3 மாதம்  சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுட்கால சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.



கரூரில் கஞ்சா தேடுதல் வேட்டையில் மூன்று குற்றவாளிகள் கைது


கரூர் மாவட்டம் முழுதும் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை குறித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடு படுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மற்றும் தாந்தோணிமலை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக மூன்று பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.







அந்த வகையில், கரூர் மக்கள் பாதை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நோக்கில், பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக பெரியகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ். தாந்தோணிமலை ராயனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் வகையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இதே பகுதியை சேர்ந்த நவீன், வ உ சி நகர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக கார்த்திக்கேயன் ஆகிய மூன்று பேர் மீது கரூர் மற்றும் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.