தமிழகத்தில் அடுத்த 5 தினங்களில் அதிக பட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்க கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Continues below advertisement

”இன்று முதல் (மார்ச்24)  முதல் மார்ச் 30 வரை:  தமிழகம், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய  முன்னறிவிப்பு: 

இன்று முதல் மார்ச் 28ஆம் தேதி வரை:  தமிழகத்தில்   ஓரிரு   இடங்களில்   அதிகபட்ச  வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில்  2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது  ஓரிரு இடங்களில்  அசௌகரியம் ஏற்படலாம்.

Continues below advertisement

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):  ஏதுமில்லை.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை". இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெப்பநிலை நிலவுகிறது. வெயிலின் தாக்கத்தில் மதிய வேளையில் குடை இல்லாமல் வெளியில் செல்வது மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இப்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. 

மேலும் படிக்க 

Lok Sabha Elections 2024: உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்துக்கு அழைத்தாரா? நடிகர் சூரி பரபரப்பு பேட்டி!

Lok Sabha Election: எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன் - கமல்ஹாசன் அதிரடி அறிவிப்பு

Delhi liquor Case: டெல்லியே அதிரும் மதுபான கொள்கை வழக்கு என்றால் என்ன? முதலமைச்சர் கைது ஏன்?