விழுப்புரம் : தவெக மாநாட்டிற்கான அனுமதி கடிதத்தினை விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளிடமிருந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளராக உள்ள பரணிபாலாஜி பெற்றுக்கொண்டார்: 33 நிபந்தனைகளுடன் முத்திரையிடப்பட்ட கவரில் அனுமதி கடிதம் என்பது வழங்கப்பட்டுள்ளது.


தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடந்த மாதம் 28ஆம் தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார்.


இந்நிலையில் மாநாடு தொடர்பாக 21 கேள்விகளை எழுப்பி விக்கிரவாண்டி காவல் துறையினர் புஸ்ஸி. ஆனந்துக்கு கடந்த 2ஆம் தேதி கடிதம் வழங்கியிருந்தனர். இந்நிலையில் கடிதத்திற்கு கடந்த 6ஆம் தேதி பிஸ்ஸி.ஆனந்த் எழுத்துப்பூர்வமாக விழுப்புரம் காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழங்கியிருந்தார்.


இந்நிலையில் இன்று மாநாட்டிற்கான அனுமதி என்பது வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு அனுமதிக்கான கடிதத்தினை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர் பரணிபாலாஜி விழுப்புரம் காவல்துணை கண்காணிப்பாளர் சுரேஷிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதில் 33 நிபந்தனைகளுடன் சீல் இடப்பட்ட கவரில் இந்த அனுமதி கடிதம் என்பது வழங்கப்பட்டுள்ளது.


குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை அருகிலேயே மாநாடு நடத்தப்படுவதால் போக்குவரத்துக்கு எந்தவித இடையூறு ஏற்படக்கூடாது என்றும் காவல்துறை அனுமதித்த இடங்களை தவிர வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று உள்ளிட்ட 33 நிபந்தனைகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.