அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழா இந்தியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வாகவே அமைந்துள்ளது என்றே கூறலாம். ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் சிறந்த ஒரிஜினல் சாங் பாடலுக்கான ஆஸ்கர் விருதையும், யானைகளை பராமரிக்கும் முதுமலை தம்பதிகளும், அவர்கள் பராமரிக்கும் யானைகள் பற்றிய ஆவணப்படமான தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவணபடத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றும் அசத்தியுள்ளது.


முதலமைச்சரிடம் நேரில் வாழத்து:


இந்த நிலையில், சிறந்த ஆவண குறும்படத்தில் தங்களை பிரதிபலித்துக் கொண்ட முதுமலை தம்பதிகளான பொம்மன் மற்றும் பெள்ளி இருவரும் இன்று சென்னை, தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்து பெற்றனர். இவர்களை நேரில் வாழ்த்திய முதலமைச்சர் இவருக்கும் கேடயங்களையும், சான்றிதழ்களையும் வழங்கியதுடன் பொன்னாடை போர்த்தி இருவரையும் சிறப்பு செய்தார்.


முதலமைச்சர்கள் இவர்களை வாழ்த்தியபோது அருகில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, அமைச்சர் மதிவேந்தன் உள்பட பலர் இருந்தனர். இந்தியாவின் முக்கியமான யானைகள் சரணாலயங்களில் ஒன்று முதுமலை யானைகள் சரணாலயம். இநத சரணாலயத்தில் யானைகளை பராமரிக்கும் யானை பராமரிப்பாளர்களாக தம்பதிகளான பொம்மன் – பெள்ளியம்மா இருவரும் உள்ளனர்.






 


தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்:


இந்த நிலையில், இவர்களது வாழ்க்கையை கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆவணப்படமாக இயக்கியிருந்தார். கடந்தாண்டு டிசம்பர் 8-ந் தேதி நெட்ப்ளிக்சில் வெளியான இந்த ஆவணப்படம் பலரது கவனத்தையும் பெற்றதுடன், ஆஸ்கர் போட்டிக்கும் தேர்வானது. குட்டியானைகளை தங்களது குடும்பத்தில் ஒருவராகவே கருதும் பொம்மன் – பெள்ளி தம்பதிகள் இந்த ஆவணப்படத்திற்கு மிகுந்த உயிரோட்டத்தை தந்தனர்.




அந்த உயிரோட்டத்தின் பிரதிபலிப்பாகவே தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருதை வென்று அசத்தியது. தங்கள் வாழ்க்கை முழுவதும் யானைகளுடன் முதுமலை வனத்திலே கழித்த தம்பதிகளான பொம்மன் – பெள்ளி தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் ஆஸ்கர் விருது வென்றதன் மூலம் மிகவும் புகழ்பெற்றனர். பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில், அவர்கள் முதலமைச்சரை நேரில் சந்திப்பதற்காக 10 பாகன்களுடன் நேற்று சென்னை வந்தனர். பெள்ளி தன் வாழ்வில் சென்னைக்கு வருவது இதுவே முதன்முறை ஆகும். பழங்குடியினருக்காக குரல் கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த படத்தை இந்த படத்தைய இயக்கிய கார்த்திகி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:Yaathisai: அடுத்த மாதம் பீரியாடிக் திரைப்படங்களின் மாதம்... PS2 , 1947 படங்களை தொடரும் மூன்றாவது படம் எது? வெளியான சூப்பர் அப்டேட்!


மேலும் படிக்க: Alia Bhatt: ஆஸ்கர் வென்ற ஆர்.ஆர்.ஆர்... கண்டுக்கொள்ளாத ஆலியா பட்.. கொதித்தெழும் நெட்டிசன்கள்..!