தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை பல்வேறு மாவட்டங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. இருந்த போதிலும் கடந்த 7-ஆம் தேதி முதல் புதிய ஊரடங்கு தலைவர்களுடன் தமிழக அரசு உத்தரவு வெளியிட்டிருந்தது. அந்த தளர்வுகள் படி கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர அனைத்து மாவட்டத்திற்கும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்பட்டு அங்கு உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு சிறு கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்பொழுது கரூர்  மாவட்டத்திற்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகப்படியாக இருப்பதால் கரூர் உள்ளிட்ட 11 மாவட்ட பகுதிகளில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டு மீண்டும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது தமிழக அரசு.


இந்நிலையில் சுகாதாரத்துறையின் சார்பாக நாள்தோறும் கொரோனா தொற்று அறிவிப்பின்படி நாளுக்கு நாள் கரூர் மாவட்டத்தில் படிப்படியாக தொற்று குறைந்து வருவதை நாம் அறிவோம். இந்நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ஆலோசனைப்படி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முன்கள பணியாளர்களுக்கான சிறப்பு முகாம், நாள்தோறும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காய்ச்சல் முகாம், மாவட்டத்தில் 30 மேற்பட்ட இடங்களில் பிரத்யேகமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி முகாம் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது. நாளை கரூர் மாவட்டத்தில் 22 பஞ்சாயத்துகளில் பொதுமக்களுக்கான காய்ச்சல் முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



நேற்று, கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200 தொட்டநிலையில் இன்று அதிலிருந்து, படிப்படியாக குறைந்து இன்று 188 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும், மருத்துவமனைகளில் சிகிச்சை முடிந்த பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்ப எண்ணிக்கை 350-ஆக கரூர் மாவட்டத்தில் உயர்ந்து உள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே கொரோனா தொற்று பாதிப்பு நிலவரம் வந்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.


இருப்பினும், பொதுமக்கள்  மாவட்டத்தில் இன்னும் பல்வேறு இடங்களில் முகக்கவசம் மற்றும் தமிழக அரசு விதித்துள்ள சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிவதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆகவே, பொதுமக்கள் தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தங்களது பயணத்தை மேற்கொள்ளவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் தற்போதுதான் படிப்படியாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.


ஆகவே, தொற்று எண்ணிக்கையை உயராமல் பாதுகாக்க பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நாள்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பில் வேண்டுகோள் விடுத்து வருகிறார். கடந்த வாரத்தில் காந்திகிராமம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு, தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கிட மும்முனை மின்சாரத்தை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் புதிய வழித்தடங்கள் பணிகள் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.