Thiruvannamalai: வள்ளுவன் வாக்கு போல ஆட்சி நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்

2000 ஆண்டுகளுக்கு முன் வள்ளுவரால் எழுதப்பட்ட திருக்குறளுக்கு ஏற்றார் போல மனிதநேயத்துடன் ஆட்சி நடத்துபவர் தமிழக முதல்வர் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் ஊராட்சியில் புதியதாக ரூபாய் 23 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கு ஏற்றியும் திறந்து வைத்தார்.

Continues below advertisement

நலத்திட்ட பணிகள்:

அதனைத் தொடர்ந்து ஈடில்லா ஆட்சி இரண்டாண்டு சாட்சி என்ற தலைப்பில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித் துறை வேளாண்மை துறை சமூக நலத்துறை உள்ளிட்ட 12 துறைகளின் சார்பில் 6779 பயனாளிகளுக்கு 15 கோடியே 86 லட்சத்து 12 ஆயிரத்து 887 ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.

இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


முன்னதாக பயனாளிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய அமைச்சர் எ.வ.வேலு, "எந்த ஆட்சி வந்தாலும் அதிகாரிகள் அதிகாரிகள் தான். அப்படிப்பட்ட அதிகாரிகள் இந்த ஆட்சியைப் பாராட்டி பேசி உள்ளார்கள் என்றால் அதுதான் திமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமை. முதலமைச்சருக்கே கிடைத்துள்ள பெருமை.

பாசிட்டிவ், நெகட்டிவ் அதிகாரிகள்:

எந்த ஆட்சி வந்தாலும் திட்டங்களை செயல்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட வேண்டும். அந்த வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் எந்தெந்த முரண்பாடு வரும், என்ன ஏற்பாடுகள் வரும் என்று பல அதிகாரிகள் நினைப்பார்கள். இவர்கள் நெகட்டிவ் அதிகாரிகள். ஆனால், எத்தனை இடர்பாடுகள் வந்தாலும் எப்படியாவது அரசு திட்டங்களையும் மற்ற திட்டங்களையும் நிறைவேற்ற 100 விழுக்காடு சில அதிகாரிகள் முயற்சி எடுப்பார்கள். இவர்கள் பாசிட்டிவ் அதிகாரிகள். அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் பாசிட்டிவ் அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். அதனால், திருவண்ணாமலை மாவட்டம் பலவகையில் பயனடைந்து வருகிறது.

 


 

வள்ளுவன் வாக்கு போல ஆட்சி:

அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிநாடு தமிழர் வாழ் மக்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானை சந்தித்து எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் அகதிகளுக்கு வீடு கட்டித் தர இடம் ஒதுக்கித் தருகிறேன் என்று கூறினேன்.

எனது கோரிக்கையை ஏற்று, மறுநாளே இன்று இடத்தைப் பார்க்க அமைச்சர் செஞ்சி மஸ்தான் வந்துள்ளார். இதைத்தான் கிராமத்திலே சொல்வார்கள் 'கையிலே காசு, வாயிலே தோசை' என்ற வகையில் இந்த ஆட்சியில் திட்டங்கள் எவ்வளவு விரைவாக நடைபெறுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். நல்வாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்குவதும், நிலை உணர்ந்து கருணை காட்டுவதும், நடுநிலைத் தவறாது திராவிட மாடல் ஆட்சி நடத்துவதும், மக்களைப் பேணி காப்பதும் ஒரு அரசுக்கு அழகு என்ற வள்ளுவன் வாக்கை போல் திராவிடம் மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு வருபவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்றால் அது மிகையாகாது.

 


ஏழை - பணக்காரன், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி, ஓட்டு போட்டவன் - ஓட்டு போடாதவன் என்று பாகுபாடு பாராமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற வகையில் மனிதநேயம் கொண்ட முதலமைச்சராக ஸ்டாலின் திராவிட ஆட்சியை நடத்தி வருகின்றார். திராவிட நாடு ஆட்சி என்பது பெரியார், அண்ணா, கலைஞர் இந்த மூன்று பேரும் என்ன சிந்தித்தார்களோ அந்த சிந்தனையின் அடிப்படையில் தான் உருவானது. அனைவருக்கும் அனைத்தும் கிடைப்பதே திராவிட மாடல் ஆட்சி.

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதல் மாநிலம். அதிலும் நம்பர் ஒன் முதலமைச்சர் ஸ்டாலின் என பத்திரிகைகள் சொல்கின்றன.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியின் மூலம் தமிழர்களின் வரலாறு 3200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதான் தமிழர்களின் வரலாறு என நாட்டுக்கு எடுத்துக்காட்டியவர் முதலமைச்சர் ஸ்டாலின்" என உரையாற்றினார்.

Continues below advertisement