விழுப்புரம்: கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் திருப்பு முனை ஏற்படுத்தியிருப்பாதகவும்  சட்டமன்ற உறுப்பினர் போல பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு தோல்வி அடைந்துள்ளதாகவும், மோடி அமித்ஷா கூட்டணி தோல்வி முகத்தை அடைந்து வருவதாக  சிபிஎம் மாநிலசெயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 


விழுப்புரம் அலமேலுபுரத்திலுள்ள மார்க்டிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், “கர்நாடக தேர்தலில் பாஜகவிற்கு பெரிய தோல்வி ஏற்பட்டு காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. இது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக தேர்தல் இந்திய அரசியலில் திருப்பு முனை ஏற்படுத்தியிருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர் போல பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொண்டு தோல்வி அடைந்துள்ளார்” என தெரிவித்தார். தற்போது மோடி அமித்ஷா கூட்டணி தோல்வி முகத்தை அடைந்து கொண்டிருப்பதாகவும் வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவினர்  தோல்வியை சந்திப்பார்கள் என்று கூறினார்.


விழுப்புரத்தில் வருகின்ற 16 ஆம் தேதி பட்டியலின பழங்குடி மக்கள் பாதுகாப்பு உரிமை மீட்பு மாநாடு சீதாராம் யெச்சுரி தலைமையில் நடைபெற உள்ளதாகவும் சாதி வெறி ஏறீ இருக்கின்ற சமூகமாக தற்போதைய சமூகம் உள்ளது மட்டுமல்லாமல் இன்றைக்கு சாதி ஊட்டி வளர்க்கப்படுவதாகவும் சாதியற்ற சமூக நிலை உருவாக வேண்டும் என வேதனை தெரிவித்தார். தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக வந்த குற்றச்சாட்டு தானும் குழந்தையிலேயே திருமணம் செய்ததாக தமிழக கவர்னர் கூறியிருப்பது குழந்தை திருமணம் தான் நல்லது தான் சொல்ல வருகிறாரா என கேள்வி எழுப்பிய அவர் சட்டத்தை மீறுகின்ற யாராக இருந்தாலும் கைது செய்யப்படவேண்டும் என்றும்,


குழந்தை திருமனத்தை ஆதரிக்கும் கவர்னராகவும், அரசியலமைப்பினை மீறுகிற நிலையில் அவர் செயல்படுவதாகவும் பலமுறை மனு அளித்தும் மத்திய அரசு ஆளுநரை மாற்ற நடவடிக்கை எடுக்காததால் உச்ச  நீதிமன்றத்தில்  தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அமைச்சரவையில் அமைச்சர்கள் வாரிசு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவதாக எடுத்து கொள்ளமுடியாத என்றும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் அனுபவம்  உள்ளவர்கள் தான் அமைச்சராக தேர்வு செய்யப்படுவதாகவும் வாரிசு அடிப்படையில் இல்லை என கூறினார். சாதாரனமாக நடைபெறுகிற சம்பவத்தை மட்டும் வைத்துகொண்டு தமிழகத்தில் சட்டஒழுங்கு சரியில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுவது ஏற்க முடியாது அவர் மட்டும் அல்ல ஆளுநரே சட்டம் ஒழுங்கு சரியில்லை என கூறுகிறார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண