தேனி மாவட்டத்தில் திமுக சார்பாக நலத்திட்ட உதவி மற்றும் அரசு விழாவில் பங்கேற்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வந்தார். அவருடன் வருகை தந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம், போடி, ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


இதில் தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர், அங்குள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாணவர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாணவர்களின் வாசிப்பு திறனை ஆய்வு மேற்கொண்டார்.


Bharat: அடுத்த அதிர்ச்சி: பாடப் புத்தகங்களில் இந்தியாவுக்கு பதிலாக 'பாரத்' எனப் பெயர் மாற்றப் பரிந்துரை




கனட மக்களுக்கு மீண்டும் விசா தர தொடங்கிய இந்தியா.. உறவில் முன்னேற்றம் ஏற்படுமா?


அதன்பின்பு வளாகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் தனியார் மாவட்ட கல்வி அலுவலகத்தின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அரசு பள்ளியின் கட்டிடங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதில் அங்குள்ள அதிகாரிகள், அரசு பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் சேதமடைந்து இருப்பதாகவும் அதை சீரமைத்து தருமாறு கேட்டுக் கொண்டனர்.


அதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி நிதி ஒதுக்கப்பட்டு விரைவில் அனைத்துப் பள்ளிகளும் சீரமைக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தார். அதன்பின்பு அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின்போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். அதற்கான பணிகளில் அங்குள்ள ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களுக்கு முழுமையான கல்வியை கற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.




மேலும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும், மீறினால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அரசுப் பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும் மாணவர்களுக்கு முறையான கல்வியை வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை துறை சார்ந்து எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 


இந்த ஆய்வின்போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.