தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


மேலும் தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில  பகுதிகளில் லேசானது / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.


08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


10.12.2023 மற்றும் 11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் புயலுக்கு பின் அமைதி என்ற வாசகத்திற்கு ஏற்ப கடந்த 2 நாட்களாக வெயில் அடித்து வருகிறது. மிக்ஜாம் புயல் வட கடலோர தமிழகம் வழியாக கடந்து சென்ற போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை சூறைக்காற்றுடன் அதிகனமழை பெய்தது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. சொல்லப்போனால் சென்னை மாநகரம் முழுவதும் ஸ்தம்பித்து போனது. கடந்த 2 நாட்களாக சற்று வெயில் அடிக்கத் தொடங்கியிருப்பதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கியுள்ளனர்.  


மீனவர்களுக்கான எச்சரிக்கை: 


அரபிக்கடல் பகுதிகள்:


07.12.2023 முதல் 09.12.2023 வரை: லட்சதீவு பகுதிகள் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில்  சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (செண்டிமீட்டரில்):


விருதுநகர் (விருதுநகர் மாவட்டம்), பொன்னமராவதி (புதுக்கோட்டை மாவட்டம்), நத்தம் (திண்டுக்கல் மாவட்டம்), சிங்கம்புணரி (சிவகங்கை மாவட்டம்), சத்தியார் (மதுரை மாவட்டம்), அரிமளம் (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 7, வாடிப்பட்டி (மதுரை மாவட்டம்) 5, குடிமியான்மலை (புதுக்கோட்டை மாவட்டம்), புலிப்பட்டி (மதுரை மாவட்டம்), திருமயம் (புதுக்கோட்டை மாவட்டம்), ஆண்டிப்பட்டி (மதுரை மாவட்டம்) தலா 4, அருப்புக்கோட்டை (விருதுநகர் மாவட்டம்), மணமேல்குடி (புதுக்கோட்டை மாவட்டம்), வம்பன் கேவிகே ஏடபிள்யூஎஸ் (புதுக்கோட்டை மாவட்டம்) தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.


CM Stalin: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ‘ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்கிடுக’ - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!


Milk Distribution: ’பால் விநியோகம் சீராகிறது.. அதிகமாக வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்’ - அமைச்சர் தகவல்