அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். 


செந்தில் பாலாஜி ஜாமீன் மனு ஏற்கனவே 2 முறை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில் உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன், அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 8வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டார்.