தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதில், ரசிது ஆவணக் கட்டணம் ரூபாய் 20 இல் இருந்து ரூபாய் 200 க்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் செட்டில்மெண்ட் பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் ரூபாய் 4 ஆயிரத்தில் இருந்து 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.


அதேபோல், அதிகபட்ச முத்திரைத்தீர்வை ரூபாய் 25 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூபாய் 200 இல் இருந்து ரூபாய் 1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் பொது அதிகார ஆவணக்கட்டணம் ரூபாய் 10 ஆயிரத்தில் இருந்து சொத்து மதிப்பில் 1 சதவீதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் கட்டுமான ஒப்பந்த பதிசு கட்டணமும் 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி வீடு வாங்குவோருக்கு சுமை அதிகரிக்கும் என கருத்துக்கள்  வெளியாகியுள்ளது.


பத்திரப்பதிவு துறையில் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை.  இதனால் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் என்பது பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த கட்டண உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆனால் ஏப்ரல் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், நிலம்வாங்குபவர்களுக்கு பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாக குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. இதனால் சொத்து விற்பனை, பரிமாற்றம் மற்றும் பிற ஆவணங்களுக்கு, 2017 ஆம் ஆண்டு  வரை கடைப்பிடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பில் 5 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் சொத்து மாற்று வரி மற்றும் 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணத்திற்கு 7 சதவீதம் முத்திரைத் தீர்வை, 2 சதவீதம் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் இருந்தது. இந்த நடவடிக்கைகள் எளிய, நடுத்தர மக்களுக்கு, குறிப்பாக வங்கிக் கடன் மூலம் வீடு வாங்குபவர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என நம்பப்பட்டது. ஆனால் தற்போது  பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இனி வீடு வாங்குபவர்களுக்கு இது சுமையாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


செங்கல்பட்டில் தொடரும் கொலைகள்..! பாமக நகர செயலாளர் படுகொலை..! தப்பி ஓடியவரை சுட்டுப் பிடித்த போலீஸ்..!


CM Letter: ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்க.. முதலமைச்சர் அடுக்கிய குற்றச்சாட்டுகள்..! முழு விபரம் உள்ளே..!


LGM Trailer: ரசிகர்களே.. எல்.ஜி.எம். இசை மற்றும் ட்ரெயிலரை ரிலீஸ் செய்யும் தோனி, சாக்‌ஷி..! எப்போது, எங்கே?