ஆளுநர் ரவியை பதவி நீக்கம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில் இருந்த குற்றச்சாட்டுகள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
கடிததில் ஆளுநர் ரவி பேசியதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளதாவது,
சங்கமம் என்ற விழாவில், மீண்டும் தமிழ் மக்களையும் பண்பாட்டையும். இலக்கியத்தையும் திராவிடக் கருத்தியலையும் அரசியலையும் இழிவுபடுத்தும் வகையிலும், அவதூறாகவும் அறிக்கைகளை வெளியிட்டதாகவும், அவை பின்வருமாறு செய்தித்தாளில் வெளிவந்தன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“துரதிர்ஷ்டவசமாக தமிழ்நாட்டில், நங்கள் திராவிடர்கள், எங்களுக்கும் இதற்கும் (பாரதம் எந்தத் தொடர்பும் இல்லை என்ற பிற்போக்குத்தனமான அரசியல் தடந்து வருகிறது -",
• “அதனால்தான் கூட்டாட்சி பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார்கள். மாநிலங்கள் உருவாக்கப்படுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் இங்கே இருந்தது என்பதை அவர்கள் உணரவில்லை".
"மாகாணங்கள் என்ற கருத்தாக்கம் நிர்வாக நோக்கங்களுக்காக உள்ளது. எனவே நமது ஒன்றியம் அமெரிக்காவைப் போலன்றி இயற்கையானது கருத்தியல் சார்ந்தது அல்ல என்பதை நாம் உணர வேண்டும்"
"இங்கே தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது? ஒரு வித்தியாசமான கதையாடல் நாடு முழுமைக்கும் பொருந்தும் அனைத்தையும் தமிழ்நாடு மட்டும். இல்லை. நாங்கள் உடன்படவில்லை' என்று சொல்லும் இது ஒரு பழக்கமாகிவிட்டது. கல்விப்புலம் உட்பட அனைத்துத் தரப்பினராலும் இந்தப் பழக்கம் வலுப்படுத்தப்பட்டுள்ளது".
"மிகவும் மோசமான இலக்கியங்கள் உருவாக்கப்பட்டு, மக்களுக்கு போதிக்கப்பட்டுள்ளன இது உடைக்கப்பட வேண்டும். உண்மை வெல்ல வேண்டும். நாம் அனைவரும் ஒன்று, பாரதத்தின் ஓர் அங்கம் என்பதே அந்த உண்மை".
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் முக்கியமான சட்டமுன் முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தேவையில்லாமல் காலதாமதம் செய்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குற்றங்களை விசாரிக்க ஒப்புதல் கோரி அனுப்பப்பட்ட கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார்.
ஆளுநர் ரவி தனது தனிப்பட்ட அரசியல் மற்றும் மதம் சார்ந்த கருத்துகளை பொதுவெளியில் பேசிவருவது அவரது பதவிக்கு அழகல்ல. இது சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் சட்டப்படி நிறுவப்பட்ட அரசாங்கத்தின் மீது அவமதிப்பு, வெறுப்பு, அதிருப்தி மற்றும் தவறான எண்ணத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்.
கிரிமினல் குற்றங்கள் குறித்து ஆளுநர் ரவி தேவையில்லாமல் அறிக்கைகள் கொடுத்து வருகிறார். சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழ்ந்தைத் திருமணம் செய்து வைத்தற்கு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால், இது குறித்து நாளிதழுக்கு, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்கவில்லை என பேட்டி அளித்துள்ளார். முக்கியப்பொறுப்பில் உள்ள ஆளுநர் இவ்வாறு கூறியது, காவல் துறையின் விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என மாற்றவேண்டு என சர்ச்சைகுரியவகையில் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜியை தனது ஒப்புதல் இல்லாமல் தகுதி நீக்கம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டது கடுமையான அரசியல் அமைப்பு மீறல் என குறிப்பிட்டுள்ளார்.