வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் இன்று (செப்.5) திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரித்துள்ளது.
இணையதளத்தில் வெளியான முழு திரைப்படம்
இந்த நிலையில் புதுச்சேரியில் காலையில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளியான நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி உள்ளது.
விஜய் நடித்த கோட் திரைப்படம் உலகம் முழுவதும் கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு படம் வெளியானது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணிக்கு திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியான சில மணி நேரங்களில் இணையத்தில் திருட்டுத்தனமாக திரைப்படம் வெளியானது.
2.54 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படத்தில் திருட்டு பதிவு பல்வேறு இணையங்களில் பகிரப்பட்டு வருகிறது. இப்படத்தின் புகைப்படங்களை கூட மிக ரகசியமாக படக்குழுவினர் வைத்திருந்தனர்.
தி கோட் திரைப்படம் இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி
ஆனால் படம் திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களில் முழு படமும் இணையத்தில் இருந்து திருட்டுத்தனமாக வெளியாகி இருப்பது படக் குழுவினரை அதிர்ச்சியாக்கி உள்ளது. மேலும் தற்போது whatsapp facebook என இணையதளங்களில் பகிரப்பட்டு வருவதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இதுகுறித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என படக் குழுவினர் தமிழக அரசை நாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .