அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி சட்ட விரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். 


இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர். ஆனால் அவரது கைது சரியானது என உச்சநீதிமன்ற தீர்ப்பளித்தபிறகு, ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார். 


அதன்பின்  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆஜர்படுத்தபட்டபோது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. அன்றைய தினமே, செந்தில்பாலாஜி மீது 120 பக்கங்களுக்கும் மேற்பட்ட குற்றப்பத்திரிகையும், 3 ஆயிரம் பக்கங்களை கொண்ட ஆவணங்களையும் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.


மேலும், செந்தில் பாலாஜி பிணை கோரிய விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம், எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திலிருந்து வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பு மனுவிற்கு நான்கு நாட்களில் பதிலளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிடப்பட்டது. வரும் 15-ஆம் தேதி வழக்கு விசாரிக்கப்படும் என தெரிவித்து ஒத்திவைக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று காலை முதல் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்களான ராமசந்திரன், ரத்தினம் உள்ளிட்டோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே பண மோசடி வழக்கில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு இது மேலும் சிக்கலை உருவாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.


Yuvan Shankar Raja: ‘இசை நிகழ்ச்சியில் குளறுபடி’ .. ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னது சரியே.. கைகொடுத்து களத்தில் இறங்கிய யுவன்ஷங்கர் ராஜா..


Dengue Issue: பரவும் டெங்கு காய்ச்சல், தமிழ்நாடு அரசு செய்யப்போவது என்ன? : தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை


Watch Video :போர்ச்சுகலில் ஏற்பட்ட விநோத விபத்து.. 22 லட்சம் லிட்டர் ரெட் ஒயின்.. ஆறுபோல ஓடிய காட்சிகள் இணையத்தில் வைரல்.