திமுக வேட்பாளருக்கு முன் ஜாமின் வழங்கியது உயர்நீதிமன்றம்
சோழவந்தான் திமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு முன் ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
Continues below advertisement

VENKATESAN_DMK
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனித் தொகுதியில் திமுக சார்பில் வெங்கடேசன் போட்டியிடுகிறார். பிரசாரத்தின் போது விதிகளை மீறியதாக அதிமுகவினர் அளித்த புகாரின் பேரில் திமுக வேட்பாளர் வெங்கடேசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவ்வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என பேசப்பட்ட நிலையில், இந்நிலையில் தனக்கு வழக்கிற்கும் தொடர்பில்லை என்றும், அதிமுகவினர் தவறான புகார் அளித்து சிக்க வைக்க முயற்சிப்பதாக,’ வெங்கடேசன் தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது.
Continues below advertisement

இதைத் தொடர்து வேட்பாளர் வெங்கடேசனுக்கு முன் ஜாமின் வழங்கி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.