கடலூர் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார், 


அப்பொழுது பேசிய அவர் "மக்கள் நாடாளுமன்றம்" என அந்தந்த ஊர்களில் நடத்தி  புதிய வேளாண் சட்டங்களை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக கூறியுள்ளார் அதற்கான வழிமுறைகனை ஒரு சிறிய புத்தகமாக வெளியிட்டார்.


புதுதில்லியில் விவசாயிகள் போராட்டம் 300ஆவது நாளை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், 2021 ஜூலை 18ஆம் தேதி கூடிய நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் ஒரு நாள் கூட மக்கள் பிரச்சினைகளை பற்றி பேசவிடாமல் ஆளும் பாஜக, நாடாளுமன்றத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தையும் இடித்துத் தகர்த்துள்ள மோடி அரசாங்கத்தை, மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்ட ஊர்கள் தோறும் "மக்கள் நாடாளுமன்றம்" நடத்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இந்த மக்கள் நாடாளுமன்றம் ஆனது வரும் நாளை முதல் ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை ஒரு வாரம் தோறும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்த போகிறோம்.



இதனை நடத்துவதற்கான வழிமுறைகளாக, ஊரில் உள்ள ஒரு மூத்தவரைக் கொண்டு தேசியக் கொடியேற்றுவது, அதற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது, தங்கள் ஊரில் உள்ள ஒருவருள் நீங்களே ஓர் அவைத்தலைவரை தேர்வு செய்வது, போராட்ட களத்தில் இறந்திட்ட விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்துவது, உங்களுள் ஓர் ‘அமைச்சர்’ வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டியதின் அவசியத்தை தீர்மான வடிவில் முன்மொழிந்து பேசுவது, அதன் மீது மற்ற உறுப்பினர்களும் பேசுவது, இந்த புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும் ஒன்றிய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றுவது, என ஒரு நாடாளுமன்றம் ஆனது எவ்வாறு நடைபெறுமா அப்படியே தங்கள் ஊர்களில் நடித்திக்கொள்ள வேண்டும்.



இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு கிளையும், அந்தந்த ஊரில் உள்ள ஒந்த கருத்துள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், மூத்த குடிமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் இளைஞர்-மாணவர், பெண்களைத் திரட்டி இந்த நாடாளுமன்றக் கூட்டங்களை நடத்த வேண்டும். கூட்டத்தில் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட வேண்டும். அந்தந்தப் பகுதியில் உள்ள விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர், பொது வாழ்வில் ஈடுபட்டு வரும் மூத்தவர் இருப்பின் அதில் ஒருவரைக் கொண்டு, தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும்.


அதற்கு பின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய பின்னர் விவசாயப் போராட்டத்தில் உயிர் நீத்த விவசாய தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் தீர்மானம் நிறைவேற்றி மௌனமாக எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டும். அதனை தொடர்ந்து வேளாண் அமைச்சர், மூன்று சட்டங்களின் எதிர்மறை விளைவுகளை சுருக்கமாக எடுத்துக் கூறி, "மாண்பமை நாடாளுமன்றத்தில் 2020 செப்டம்பர் 15 முதல் 20" முடிய மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் வணிக சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும் பேரபாயம் கொண்டதாகும்.


இதன் மீது போதுமான பரிசீலனை செய்யாது மேதகு தலைவர் ஒப்புதல் அளித்தது வேதனையளிக்கிறது. விவசாயிகள் குடியரசுத் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி போராடிவரும் விவசாயிகளுக்கு மக்கள் நாடாளுமன்றம் ஆதரவு தெரிவிப்பதுடன், செப்படம்பர் 2020 நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் வணிக சட்டங்களையும், ஏப்ரல் 17-ம் தேதி நிறைவேற்றப்பட்ட மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெறுமாறு மக்கள் நாடாளுமன்றம் ஒன்றிய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்ற தீர்மானத்தை முன்மொழிய வேண்டும். முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்து அவையில் உறுப்பினர், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் தங்களது கருத்துக்களை சபாநாயகர் அனுமதியுடன் தெரிவித்திடல் வேண்டும்.


நிறைவாக தீர்மானம் அவையின் ஒப்புதவோடு நிறைவேற்றப்பட வேண்டும். மக்கள் நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை Cabinet Secretary, Rashtrapati Bhawan, New Delhi - 110 004 Email ID: cabinet@nic.in      என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இவ்வாறு நடைபெறவுள்ள நாடாளுமன்ற கூட்டம் என்பது, கொரோனா காலமாக இருப்பதால், அரசு அறிவித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளுக்கு உட்பட்டு. தனி மனித இடைவெளியை பின்பற்றி, கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிந்து பங்கு பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.