இந்தாண்டு டிசம்பருக்கு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை

’’தஞ்சை-கும்பகோணம்-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை மொத்த நீளம் 47.835 கி.மீயாக உள்ள நிலையில் 24.425 கி.மீ பணிகள் கடந்த டிசம்பரில் முடிவுற்றது’’

Continues below advertisement

தஞ்சை-கும்பகோணம்-விக்கிரவாண்டி, தஞ்சை தேசிய நெடுஞ்சாலையினை மேம்படுத்தி நான்கு வழிச்சாலை அமைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு சாலைப்பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது.  இந்த பணியை தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் நிருபர்களிடம் கூறுகையில், இச்சாலைப்பணியினை விரைந்து முடித்திடும் நோக்கத்தில் மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  இதில் சோழபுரம்- தஞ்சை இடையே  வெண்ணாறு-1, வெட்டாறு-1, காவேரி-1 மற்றும் சுள்ளனாறு-3  என 6  பெரிய பாலங்களும்,  சிறிய பாலம் மொத்தம் 56. மேம்பாலம் 18. குறுகிய பாலம் 103. ரயில்வே மேம்பாலம் - 1. சாலையின் மொத்த நீளம் 47.835 கி.மீ. இதில் 24.425 கி.மீ பணிகள் டிசம்பர் 2021 வரை முடிவுற்றது. மொத்த பணிகள் டிசம்பர் 2022 க்குள் முடிக்கப்பட்டு முழுமையான புறவழிச்சாலை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

Continues below advertisement

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election | நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாளர் நியமனத்திற்கு தேர்தல் ஆணையம் சிறப்பு அனுமதி

 

மேலும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி முதல் தஞ்சை வரை உள்ள சாலையில் உள்ள  பாபநாசம் சாலை மிகவும் குறுகலானதாகவும் இந்த சாலையின் ஓரத்தில் குடியிருப்புகள் அதிகமாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த வழித்தடத்தில் தஞ்சை கும்பகோணம் இடையேயான தொலைவு 50 கிலோ மீட்டர் ஆகும்.  இந்த தொலைவை பஸ் கடந்து செல்வதற்கு 1.30 மணி நேரம் பயண நேரம் ஆகிறது. இதில் காவிரி, வெண்ணாறு, வடவாறு உள்ளிட்ட 2 இடங்களில் ஆற்றுப்பாலங்கள் தாராசுரத்தில் ரயில்வே மேம்பாலம் வளையபேட்டை, ராஜகிரி, திருக்கருக்காவூர் உள்ளிட்ட 20 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரியவகை அணில் குரங்குகள் திருடப்பட்டதால் பரபரப்பு


பாபநாசம் மற்றும் அதன் அருகே உள்ள கோபுராஜபுரம், மேல செம்மங்குடி, பொன்மான் மேய்ந்த நல்லூர், சூலமங்கலம், பொரக்குடி வடக்குமாங்குடி, அருண்மொழிபேட்டை, வையச்சேரி, பெருமாக்கநல்லூர், உதாரமங்கலம், அகரமாங்குடி, அன்னப்பன்பேட்டை உள்ளிட்ட இடங்களில் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது  மேற்கண்ட பணிகள்யாவும் டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என  தெரிவித்து கொள்ளப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | திமுக அரசு, மத்திய அரசுக்கு சிம்மசொப்பனமாக இருக்கிறது - உதயநிதி ஸ்டாலின் கும்பகோணத்தில் பரப்புரை

முன்னதாக கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் கீழக்கோயில்பத்து மற்றும் உக்கடம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நெல் கொள்முதல் நிலையத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குனர் . உதய சங்கர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local Body Election | ’சட்டமன்ற தேர்தல் வந்தால் அதிமுக தான் வெற்றி பெறும்’ - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு

Continues below advertisement