பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றதால் சாலையின் உயரம் அதிகரித்து விபத்து நேரிட்டதாக வரும் செய்தியை தவிரக்கமுடியவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார். 


 






தஞ்சை அருகே களிமேடு கிராமத்தில், தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 12பேர் உயிரிழந்த சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செய்தி அறிந்ததும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்து அவர்கள் குடும்பத்திற்காக உடனடி நிவாரணமாக இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உத்தரவிட்டார், இதேபோல தமிழக அரசும் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளது. அதேபோல விபத்தில் சிக்கிய நபர்களுக்கும், அரசு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.  


சாலை உயரம் அதிகரிப்பு


காலை நிலவரப்படி 11 பேர் மரணம் முடிந்த நிலையில் மருத்துவமனையில் மேலும் ஒருவர் இறந்து போனதால், இறந்தவர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது. சிகிச்சை பெற்று வரும் அனைவரும் பூரண நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.புதிய சாலை அமைக்கும் போது, பழைய சாலையை பெயர்த்து எடுக்காமல், சாலை விரிவாக்கப் பணி நடைபெற்றதால், சாலையின் உயரம் அதிகரித்து விபத்து நேரிட்டதாக வரும் செய்தியை தவிரக்கமுடியவில்லை. அரசு இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். மக்கள் வாழும் பகுதியில் உள்ள உயர் மின் அழுத்த கம்பிகளையெல்லாம் மாற்றிவிட்டு, புறநகர் பகுதிக்கு நகர்புற பகுதிக்கு மாற்ற வேண்டும் தொடர்ந்து 13 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த விழாவை பாரம்பரிய விழாபாதுகாப்புடன் அரசு முழு மரியாதையுடன் கொண்டாடி இருந்திருக்க
வேண்டும்.


முன்னதாக இன்று தஞ்சாவூரில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண