காஞ்சிபுரம் அடுத்த குருவி மலையில் சிறிய அளவில் பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு தயாரிக்கும் ஆலையில் சிறிய ரக பட்டாசுகள் மற்றும் வான வேடிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 12:00 மணி அளவில் குடோனுக்கு வெளியே காய வைக்கப்பட்டு இருந்த பட்டாசின் மூலப்பொருள் மூலப் பொருட்கள் திடீரென தீப்பற்றி எறிய துவங்கி உள்ளது.
இந்த தீ வேகமாக பரவி பட்டாசு தயாரிக்கும் ஆலை குடோன் பகுதியிலும் பரவியது. இந்த தீ விபத்து நடைபெற்ற பொழுது, குடோன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 25க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்துள்ளனர். இந்த நிலையில் திடீரென தீப்பற்றி எரிந்த பட்டாசு குடோனில் பலத்த சத்தத்துடன் சிறிய நில அதிர்வை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர்.
இதனை அடுத்து பதறி அடித்து அப்பகுதிக்கு ஓடிச் சென்ற மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் காஞ்சிபுரம் தீயணைப்பு துறை எனக்கு தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த, இரண்டு தீயணைப்பு வாகனங்கள் தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 9
1. தேவி (35) w/o ராஜா
2. சுதர்சன் வயசு 31 சன் ஆப் குணசேகரன்
3. பூபதி (53) so சுந்தரம்
4. விஜயா 38 wo கங்காதரன்
5. முருகன் 50
6. சசிகலா செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு
மீதம் 3 பேர் அடையாளம் தெரியவில்லை. அதில் 2 ஆண் மற்றும் ஒரு பெண் ஆக உயர்ந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.