Manoj Death Funeral: மறைந்த மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போ, எங்கே நடக்குதுன்னு தெரியுமா.?

மனோஜ் பாரதிராஜாவின் மறைவு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்குகள் எப்போது, எங்கே நடைபெறுகிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Continues below advertisement

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே மகனும், நடிகரும், இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா, மாரடைப்பு காரணமாக நேற்று மாலை திடீரென காலமானார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியடைந்தது. முதலமைச்சர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைத்துறையினரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், மனோஜ் உடலுக்கு இறுதிச் சடங்கு எப்போது, எங்கே நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

Continues below advertisement

மனோஜ் உடலுக்கு இறுதிச்சடங்கு எப்போது.?

மறைந்த மனோஜிற்கு 48 வயதே ஆகிறது. இந்த வயதில் அவர் மறைந்தது, திரையுலகினர் மட்டுமல்லாது, ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தந்தை இயக்குனர் இமயமாக இருந்தபோதிலும், மணிரத்னம், ஷங்கர் போன்ற மிகப்பெரும் இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நிலையிலும், திரையுலகில் தன்னால் ஒரு இடத்தை பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம், மனோஜை மிகவும் வாட்டியுள்ளது. 

இந்த சூழலில், சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்த மனோஜிற்கு, சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென நேற்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். மறைந்த மனோஜின் உடல் தற்போது பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மனோஜின் உடல், இன்று மாலை 3 மணி வரை நீலாங்கரை வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola