செங்கல்பட்டில் திருநங்கை காதலியுடன் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

செங்கல்பட்டு அடுத்த பழவேலியில் உள்ள  இருளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ராமு (24) இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்புதான் திருமணமாகியுள்ளது. ராமுவும் அதே பகுதியை சேர்ந்த திருநங்கையான சரளா என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ராமுவின் திருமணத்திற்கு முன்பிலிருந்தே இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர்.திருமணம் செய்து வைத்தால் சரளாவை விட்டு மீண்டு விடுவான் என ராமுவின் பெற்றோர் ராமுவிற்கு ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

 

ஓரிரு மாதங்கள் சரளாவுடன் பழகாமல் பேசாமல் இருந்து வந்த ராமு மீண்டும் திருநங்கைக சரளாவுடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனால் ராமு மனைவியிடம் சரிவர அன்பு காட்டவில்லை. இதுகுறித்து ராமுவின் மனைவி திருநங்கை சரளாவையும் தனது கணவர் ராமுவையும் கண்டித்துள்ளார். சரளாவின் பழக்கத்தை விட்டொழிக்க சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனால் ராமுவும் அவரது திருநங்கை காதலி இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர் 

 

இந்நிலையில் பழவேலி பாலாற்றங்கரையில் ஒரு மரத்தில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் இருவரது சடலத்தையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 





Suicidal Trigger Warning

 

 

 

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

 

 

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,

எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,

சென்னை - 600 028.

தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)