டாஸ்மாக் கடைகள் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை செயல்பட  அனுமதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய் தோற்று அதிகமாக பரவி வரும் 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


எந்தெந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கிடையாது ?


கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொடர்ந்து நோய் தோற்று அதிகமாக காணப்படுகிறது, அதனால் நோய் பரவல் தீவிரத்தை குறைக்க இந்த குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்க அனுமதி கிடையாது. மேற்குறிப்பிட்டுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழகத்தில் மீதமுள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் 14.06.2021 முதல் திறக்கப்படும். காலை 10 மணிக்கு திறக்கப்படும் டாஸ்மாக் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.