மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்தது தமிழக அரசு. அதேபோல மே2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை என்பதால், அதுமட்டுமின்றி வழக்கமான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு என்பதாலும் டாஸ்மாக் விடுமுறை ஆகும். இந்நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால் மதுக்குடிப்போர் நேற்று டாஸ்மாக் கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மதுவை வாங்கிக்கொண்டனர். இதனால் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் நேற்று வழக்கமான கூட்டத்தை விட அதிகமான கூட்டமே காணப்பட்டது. 




நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு தமிழகம் முழுவதும் மது விற்பனை ஆகியுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் ரூ.63 கோடிக்கு மது விற்பனையானது. அடுத்தபடியாக மதுரையில் ரூ.59 கோடிக்கும், திருச்சி,கோவை மற்றும் சேலத்தில் தலா ரூ.56 கோடிக்கும் மது விற்பனையானது. பொங்கல், புத்தாண்டு, தீபாவளி போன்ற விசேஷநாட்களில் மதுவிற்பனை களைகட்டுவது வழக்கம். தற்போது விடுமுறை நாட்களை கணக்கில்கொண்டும் மதுவிற்பனை வரலாறு படைக்கிறது.