தமிழ்நாடு அரசுக்கு பிற வருவாய்களை காட்டிலும் அதிக வருவாய் ஈட்டி தருவது டாஸ்மாக்தான். பிற மாநிலங்களை பொறுத்தவரை மதுபானங்களை விற்பனை செய்வது தனியார் நிறுவனங்கள்தான். ஆனால், தமிழ்நாட்டில் அரசே பொறுப்பு எடுத்து நடத்தி வருகின்றனர்.


கடந்த 1983 ம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளை தமிழ்நாடு அரசு நடத்தி இதுவரை 5,198 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதன்மூலம் தமிழ்நாடு அரசுக்கு சாதாரண நாட்களில் வருவாயாக ரூ.70 கோடியும்,  பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி வரையிலும் வருமானம் கிடைத்து வருகிறது. 


மேலும், தமிழ்நாட்டில் 2022 புத்தாண்டுக்கு மட்டும் டாஸ்மாக் கடைகளில் ரூ.147.69 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையானதாக டாஸ்மாக் நிறுவனம் தகவல் கிடைத்துள்ளது. இந்தநிலையில், 2021 - 22 ல் டாஸ்மாக் வருவாய் ரூ. 36,013.14 கோடி என கொள்கை விளக்ககுறிப்பு விளக்கமளித்துள்ளது. 






தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 21,000 கோடி ரூபாயும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 19,000 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக தகவல் வெளியாகியது. இதன்மூலம் தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக, திமுக வெளியிட்ட சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் திமுக அரசு மது விலக்கு கொஞ்சம் கொஞ்சமாக அமலுக்கு கொண்டு வரப்படும் என்று அறிவித்ததாக செய்திகள் பரவி வந்தன. இந்தநிலையில், திமுக அரசு தேர்தல் அறிக்கையில் அப்படி எதுவும் அறிவிக்கவில்லை என மதுவிலக்கு ஆயதீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


Breaking News LIVE: 6 முதல் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி போட அனுமதி


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண