தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு நேற்று அறிவித்தது. இந்த நிலையில், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தன


ஜானி வாக்கர் விஸ்கி, பெய்லிஸ் ஐரிஸ், வோட்கா உள்ளிட்ட மதுபானங்களை டாஸ்மாக் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த வகை மதுபானங்களில் விலையை டாஸ்மாக் நிர்வாகம் உயர்த்தியுள்ளது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று டாஸ்மாக் அறிவித்துள்ளது. அதன்படி, குறைந்த ரக மதுபானங்கள் விலையில் 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், நடுத்தர ரக மதுபானங்கள் விலையில் 300 ரூபாயும், உயர் ரக மதுபானங்கள் விலையில் 500 ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளிலும், மொத்த விற்பனை கூடங்களிலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தன. இந்த விலை உயர்வு மது குடிப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






முன்னதாக, கடந்த 2020 மே மாதம் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டது. சாதாரண வகை 180 மில்லி லிட்டர் மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், பிரீமியம் வகை 180 மில்லி லிட்டர் மதுபான பாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாயும், பிரீமியம் வகை 180 மில்லி லிட்டர் மதுபாட்டிலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாயும் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட்டு வந்தது. கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கடைகள், சில தினங்களுக்கு காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்கப்பட்டு மதுவிற்பனை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தற்போது மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.


 






LPG Gas Cylinder Price Hiked: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.25 அதிகரிப்பு, மக்கள் வேதனை