எலைட் டாஸ்மாக் கடைகளில் வெளிநாட்டு மதுபானங்களில் விலை இன்று முதல் உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இத்தகைய விலை உயர்வானது ரூ.10 முதல் அதிகப்பட்சமாக ரூ.320 வரை அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பீர், ஒயின் விலை உயர்ந்துள்ளது மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று அரசு மதுபானக்கடைகளில்  நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.


தமிழகம் முழுவதும் அரசு மதுபான கடைகளில் மது பாட்டில்கள் ஐந்து முதல் பத்து ரூபாய் வரை கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.  இது தொடர்பாக பேசிய அமைச்சர் முத்துசாமி, குற்றச்சாட்டுகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் தற்போது எலைட் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விலை உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


புதிய விலை உயர்வு அனைத்து குவாட்டர், ஒயின், பீர் என அனைத்து வகையான மதுபானங்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வின்படி 330 மில்லி வெட்மென் பில்சென்னர் பீர் ரூ.280ல் இருந்து ரூ.290 ஆக உயர்ந்துள்ளது. 500 மில்லி ஜெர்மணியா பில்ஸ்நர் பீர் ரூ.250ல் இருந்து ரூ.270 ஆகவும், 300 மில்லி ஹாவெர்லி விட் பீர் ரூ.290ல் இருந்து ரூ.300 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் அரசு சார்பில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு மது விற்பனைகள் நடந்து வருகிறது. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கப்படுவதாக  குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில், பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வசூலித்தால் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மது பிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதற்கிடையே இன்று  டாஸ்மாக் நிர்வாகம் மதுபானங்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது, மது பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மேலும் படிக்க,


Crime: குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: கணவன் உள்ளிட்ட 2 பேர் கைது


‘செந்தில் பாலாஜி, பொன்முடி வரிசையில் அடுத்து அனிதா ராதாகிருஷ்ணன்?’ ஆவணங்களை தயார் செய்த அமலாக்கத்துறை; ரெய்டுக்கு தயார்!