தனியார் ரிசார்ட்டு செயற்கை அருவிகளை கண்காணிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக  தமிழ்நாடு அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தெரிவித்துள்ளது.


தமிழ்நடு முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் பல்வேறு ரிச்சார்ட்டுகள் உள்ளன. இவைகளில் பல்வேறு தனியார் ரிசார்ட்டுகளில்  அதிகப்படியான ரிசார்ட்டுகளில் செயற்கையான நீர் வீழ்ச்சிகள் உருவாக்கப்படுள்ளன. இவற்றை படமாக, வீடியோவாக பதிவு செய்து தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் விளம்பரத்திற்காக பயன்படுத்தி  வருகின்றனர். இதனால் கவரப்படும் சுற்றுலாப் பயணிகள் தங்களது சுற்றுலா பயணத்திட்டத்தில் இந்த ரிசார்ட்டுகளை சேர்த்து விடுகின்றனர். ஆனால் இதன் தன்மை குறித்து எந்த சுற்றுலாப் பயணிகாளும் யோசிப்பது கிடையாது. 


இந்த தனியார் ரிசார்ட்டுகளில் உருவாக்கப்பட்டுள்ள, நீர் வீழ்ச்சிகள் குறித்து, நெல்லை அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “ மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அதிகப்படியான நீர் வீழ்ச்சிகள் இயற்கையாகவே உள்ளது. அதேபோல், நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குற்றாலம் மற்றும் ஐந்தருவி போன்ற இயற்க்கையான அருவிகள் உள்ளன. இந்த அருவிகளில் அதிகப்படியாக நீர் வரும் போது, இதில் இருந்து தனியான நீர்வழிப்பாதையை உருவாக்கி  செயற்கையான நீர் வீழ்ச்சிகளை உருவாக்குகின்றனர். இதனை வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் பதிவிட்டு, பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள சுற்றூலாப் பயணிகளை ஈர்க்க தனியார் ரிசார்ட்டுகள் இவ்வாறு செய்கின்றது. இதனால், இயறகையான நீர்வழிப்பதை மாறிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். 


இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு ஐந்து நாட்களுக்கு முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்தது. இன்று சுற்றூலாத்துறை இயக்குனர் தலைமையில், நில நிர்வாக ஆணையர், தலைமை வனக்காப்பாளர் உள்ளிட்ட 10 பேர் கொண்ட குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதனை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு கூறியது. இதனை பாராட்டிய மதுரை கிளை, ’நீதிமன்ற உத்தரவை மதித்து 5 நாட்களில் ஆய்வுக் குழுவை அமைத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகள். ஆனால், தனியார் ரிசார்ட்டுகளில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளாதா என்பதை தமிழ்நாடு அரசு கண்காணித்து அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளது. இதற்கு பதில் அளித்த தமிழ்நாடு அரசு, 99.99 சதவீதம் இவ்வாறு எங்கேயும் நடக்கவில்லை. இவ்வாறு எங்காவது நடைபெற்றிருந்தால் அதனை இந்த குழு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.