2020 - 21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அன்பழகன் நூற்றாண்டு விழா:
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இதைப் போற்றும் வண்ணம் பள்ளிக் கல்வித் துறையின் வளர்ச்சிக்கெனெ ரூபாய் 7500 கோடி மதிப்பீட்டில் பேராசிரியர் அன்பழகனாரின் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் என்ற மாபெரும் திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்த அரசால் அறிவிக்கப்பட்டு, நடப்பு ஆண்டிற்கு சுமார் ரூபாய் 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
அரசு எடுத்து வரும் பல்வேறு ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த செயல்பாடுகளால் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து முதலமைச்சர் நடப்பு ஆண்டிலேயே பல்வேறு கட்டுமானத்திற்கும் மராமத்துப் பணிகளுக்கும் கூடுதலாக சுமார் 1400 கோடி ரூபாயை நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
114 பள்ளிகள் தேர்வு:
இத்துடன், பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை செயல்படும் டிபிஐ (D.P.I.) வளாகத்தில் பேராசிரியர் அன்பழகனின் திரு உருவச் சிலை நிறுவப்படுவதுடன் அவ்வளாகம் “பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்” என்றும் அழைக்கப்படும்.
மேலும் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன் மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் பெயரில் விருதும் வழங்கப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், 2020 - 21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டின் சிறந்த அரசுப் பள்ளிகளுக்கான பட்டியல் வெளியாகி உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் இருந்து தலா 3 பள்ளிகள் என மொத்தம் 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சிறந்த பள்ளிகளுக்கான பெயர் பட்டியல் 2020-2021
மாவட்டம் அரியலூர்
ஒன்றியத்தின் பெயர் - பள்ளியின் பெயர் மற்றும் ஊர்
அரியலூர் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இடையத்தான்குடி
அரியலூர் - கே.ஆர்.வி. அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி, இலிங்கத்தடிமேடு
ஜெயங்கொண்டம் - ஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளி, தழுதாழைமேடு
மாவட்டம் - சென்னை
ஒன்றியத்தின் பெயர் - பள்ளியின் பெயர் மற்றும் ஊர்
பெரம்பூர்- டான்பாஸ்கோ அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி, வியாசர்பாடி, சென்னை-39
அடையாறு - சென்னை தொடக்கப்பள்ளி, பாரதிதாசன் தெரு, திருவான்மியூர், சென்னை -41
தி.நகர் - சென்னை தொடக்கப்பள்ளி, புலியூர், கோடம்பாக்கம், சென்னை-24
மாவட்டம் - செங்கல்பட்டு
ஒன்றியத்தின் பெயர் - பள்ளியின் பெயர் மற்றும் ஊர்
காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ஓட்டேரி விரிவு
அச்சிறுப்பாக்கம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பெரும்பேர்க்கண்டிகை
புனித தோமையர் மலை- ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மேடவாக்கம்
மாவட்டம் - கோயம்புத்தூர்
ஒன்றியத்தின் பெயர் - பள்ளியின் பெயர் மற்றும் ஊர்
எஸ்.எஸ்.குளம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஷாஜகான் நகர்
கோவைநகரம் -மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பாப்பாநாயக்கன்பாளையம்
பேரூர் - ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ராம செட்டியாளையம்
114 பள்ளிகளின் பட்டியலையும் காண: