தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப்ஜான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, அடுத்த 3-4 நாட்களில் அதாவது டிசம்பர் 14-ந் தேதி காலை வரை, கிழக்கு கடலோர தமிழகம், தென்தமிழகம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் நல்ல மழையை கொடுக்கும். சென்னை முதல் நாகப்பட்டினம் வரையிலான கடலோர பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மழை பெய்கிறது. இந்த மழை அனைத்து இடங்களிலும் இருக்காது. அங்கும், இங்கும் இடைவேளை விட்டு பொழியும்.






மேலும், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, "வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக 10.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


11.12.2021: கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பொதுவாக வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 12.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை. காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.




13.12.2021: கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். 14.12.2021: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை.


32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): குந்தா பாவம் (நீலகிரி), ஆயக்குடி (தென்காசி) தலா 4. சாம்ராஜ் எஸ்டேட் (நீலகிரி), திருச்செந்தூர் (தூத்துக்குடி), கோத்தகிரி (நீலகிரி), மணிமுத்தாறு (இருநெல்வேலி), சங்கரிதுர்க் (சேலம்) சேரன்மகாதேவி (இருநெல்வேலி) நலா 3, இண்டுக்கல் (இண்டுக்கல்) குன்றூர் (நீலகிரி), மிமிசல் (புதுக்கோட்டை), தென்காசி (தென்காசி), ஊத்துக்குளி (திருப்பூர். கன்னியாக்குமரி (கன்னியாக்குமரி, குமாரபாளையம் (நாமக்கல்). அம்பாசமுத்திரம் (திருநெல்வேவி), தென்பரநாடு (இருச்சி), கெட்டி (ரீலகிரி), ஆலங்காயம் (இருப்பத்தூர் ) தலா 2. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண