வீட்டுக்கு வேகமா போயிருங்க! இன்று இரவு 10 மாவட்டங்களில் மழை இருக்கு: வானிலை அப்டேட்
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் இன்று இரவு கோவை, தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வானிலை:
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்கான மழை நிலவரம் : மழை நிலவரத்தை பொறுத்தவரையில், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. முக்கடல் அணை பகுதியில் (கன்னியாகுமரி) 1 செ.மீ மழை அளவு பெய்திருக்கிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வெப்பநிலையை நிலவரத்தை பொறுத்தவரையில், அதிகபட்ச வெப்பநிலை :கரூர் பரமத்தி மற்றும் மதுரை (விமான நிலையம்) 37.5° செல்சியஸ் அளவும், குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்)- கரூர் பரமத்தி: 20.0° செல்சியஸ் அளவு பதிவாகியுள்ளது.
Also Read: அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ஏப்.1 இல்லை.! காரணம் என்ன?
7 நாட்களுக்கு வானிலை:
27-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
28-03-2025: மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம்; புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் அளவு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை:
சென்னையில் இன்று மற்றும் நாளை ( மார்ச் 26, மார்ச் 27 ) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை, 26 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்க கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.