தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வரும்ஏபரல் 1 ஆம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 2 ஆம் தேதி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஊதியம் தேதி மாற்றம்:
தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சுமார் 9.30 லட்சம் பேர் பணி புரிந்து வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு ஊதியமானது , மாதத்தின் முதல் நாளான 1 ஆம் தேதி வழங்கப்படும். அதாவது , அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இந்நிலையில், ஏப்ரல் மாதத்தில் 1 ஆம் தேதி ஊதியம் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம், வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி, வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏப்ரல் 1 ஆம் தேதி வரவு வைக்கப்படாது என்றும் ஏப்ரல் 2 ஆம் தேதி வரவு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: மக்களே கவனம்! 40 டிகிரியை தொடும் வெப்பநிலை:அதிக வெயில் எங்கு தெரியுமா?
நிதியாண்டின் கடைசி நாள்:
2024-2025ம் நிதியாண்டின் கடைசி நாள் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், மார்ச் 31 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வருவதால் விடுமுறை நாளாகும். மேலும்,மார்ச் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், அந்நாளும் விடுமுறையாகும். இதையடுத்து மார்ச் 29ம் தேதி சனிக்கிழமை வருகிறது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 1ம் தேதியை பொறுத்தவரை வங்கி கணக்கு தொடக்கம் என்பதால், அன்று எந்த பணிகளும் வங்கிகளில் நடைபெறாது. இதனால், அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுபவர் மற்றும் ஓய்வூதியம் பெறுவபவர்களுக்கு , இந்த முறை ஏப்ரல் 2ம் தேதி தான் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு தெரிவித்தது என்ன?
இந்நிலையில் தமிழ்நாடு அரசு தெரிவித்திருப்பதாவது, "தமிழ்நாடு அரசின் கீழ் பணிபுரியும் சுமார் 9.30 இலட்சம் ஊழியர்கள்-ஆசிரியர்கள்,7.05 இலட்சம் ஓய்வூதியர்கள்- குடும்ப ஓய்வூதியர்கள் ஆகியோரது மார்ச் மாதச் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் /குடும்ப ஓய்வூதியம் ஆகியவை, இந்தாண்டு ஏப்ரல் 1 அன்று வருடாந்திர கணக்கு முடிவு காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பணியாளர் மற்றும் ஓய்வூதியர்களின் வங்கிக்கணக்கில் 02.04.2025 வரவு வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. என தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.