வானிலையை பொறுத்தவரை, மார்ச் 11 ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இரண்டு நாள் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் பார்ப்போம்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை
உள்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று 08-03-2025 மற்றும் 09-03-2025 நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.
10-03-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Also Read: Vijay: ராங் ப்ரோ.! விஜய் பங்கேற்ற இஃப்தார் நிகழ்ச்சியில் ரூ. 1 லட்சம் திருட்டு: நடந்தது என்ன?
12 மாவட்டங்களில் கனமழை:
11-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
12-03-2025 மற்றும் 13-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14-03-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
Also Read: Stalin: தோழி விடுதிகளை அறிவித்த ஸ்டாலின்: மகளிர் தினத்தில் குட் நியூஸ் சொன்ன முதல்வர்...
அடுத்த ஐந்து தினங்களுக்கான வெப்பநிலை:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:
08-03-2025 முதல் 10-03-2025 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும்.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:
08-03-2025 முதல் 10-03-2025 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
Also Read: பிரதமர் மோடி X பக்கத்தை கையாளும் தமிழக செஸ் வீராங்கனை.! யார்? ,எதற்காக?
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (08-03-2025); சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் தெளிவாக காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 -24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (09-01-2025) சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் தெளிவாக காணப்படும். மேலும், அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 -24° செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.