Women's Day 2025 : மகளிர் தின விழா.. விழிப்புணர்வு மராத்தான்.. ஆயிரக்கணக்கில் கலந்துக்கொண்ட பெண்கள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Continues below advertisement

கரூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நடந்த மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Continues below advertisement

 

 



கரூரில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச உதவி மைய எண்:181 மற்றும் காவல் உதவி செயலி மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சம்மந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கரூர் மாவட்ட காவல்துறை சார்பாக நடைபெற்ற 5 கி.மீ மாராத்தான் மற்றும் 3 கி.மீ வாக்கத்தான் போட்டியினை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா கொடியசைத்து துவக்கி வைத்தார்.


5 கி.மீ மாரத்தான் போட்டியானது கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் ஆரம்பித்து ஜவஹர் பஜார், தைலா சில்க்ஸ், பழைய GH ரோடு, திண்ணப்பா தியேட்டர், MG ரோடு, 80 அடி சாலை, கோவை ரோடு, பேருந்து நிலைய ரவுண்டான வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவு பெறுகிறது.  


இதன் தொடர்ச்சியாக 3 கி.மீ வாக்கத்தான் போட்டியானது கரூர், திருவள்ளுவர் மைதானத்தில் ஆரம்பித்து ஜவஹர் பஜார், தைலா சில்க்ஸ், பழைய GH ரோடு, திண்ணப்பா தியேட்டர், பேருந்து நிலைய ரவுண்டான வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் நிறைவு பெறுகிறது.

   

இப்போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவிகள், கரூர் மாவட்ட பெண் காவலர்கள் மற்றும் பெண் ஊர்க்காவல் படையினர் என சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.  இப்போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்க உள்ளார்.


Continues below advertisement
Sponsored Links by Taboola