தமிழ்நாட்டில் இன்று இரவு 7 மணிக்குள் நேரத்திற்குள், 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
18 மாவட்டங்கள்:
சிவகங்கை, புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல், கோவை ஆகிய 18 மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகையால், இந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக, உங்களது திட்டங்களை வகுத்து கொள்ளுங்கள். வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், குடை உள்ளிட்ட மழை பாதுகாப்பு உபகரணங்களுடன் செல்லுங்கள்.
வானிலை அறிவிப்பு:
இந்நிலையில், தமிழ்நாட்டில் வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு , ஜூலை 10 ஆம் தேதி வரை பல்வேறு பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்து விடுத்துள்ளதாவது, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளிலும் , வங்க கடல் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் ஜூலை 5 - 7 ஆம் தேதி வரை மணிக்கு சுமார் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Also Read: Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!