தமிழ்நாட்டில் இன்று இரவு 10. 30 மணிவரை 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இரவு நேரங்களில் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
18 மாவட்டங்கள்:
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருச்சி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களில் இன்று இரவு 10.30 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், வானிலை தொடர்பாக வானிலை மையம் தெரிவித்ததாவது, நாளைய தினம் கோவை மற்றும் நீலகிரி ஆகிய 2 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. மேலும் வரும் 6 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.