"செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சேலம், திருப்பத்தூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது"

Continues below advertisement

வடகிழக்கு பருவமழை

தமிழ்நாட்டில் இன்று ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணி வரை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மாலை 4 மணி வரை மழைக்கு எச்சரிக்கை

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல் மற்றும் பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4 மணி வரை இந்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

திடீரென மழை பெய்வதால், இந்த கனமழை காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்க வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மேல் சொன்ன பகுதிகளில் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு

மாலை நேரத்தில் இந்த மழை பெய்ய இருப்பதால் வேலைக்கு சென்றுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பாதிப்படைய வாய்ப்பிருப்பதாக தெரியவந்துள்ளது. அதற்கேற்றவாறு பொதுமக்கள் தங்களது பயணத் திட்டத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.