நெருக்கடி காலத்தில் திமுகவின் தியாகங்கள்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்க அரசியல் கட்சிகள் தீவரமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் தேர்தல் பணியை துரிதப்படுத்தியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்க திட்டம் தீட்டி வருகிறது. அதே நேரம் அதிமுக தலைமையில் ஒரு அணியும், நடிகர் விஜய் தலைமையில் மற்றொரு அணியும் போட்டி போட்டு வருகிறது. அந்த வகையில் திமுகவை வீழ்த்த இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து திமுகவை அழித்து விடலாம் என கனவு கான்கிறார்கள் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக நிர்வாகி இரா.ஏ. பாபு இல்லத் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடத்தி வைத்தார். அப்போது மணமக்களை வாழ்த்து உரையாற்றிய அவர், நெருக்கடி காலத்தில் திமுக சந்தித்த தியாகங்கள் நிறைய உண்டு.தலைவர் முதல் தொண்டர் வரை பல்வேறு கொடுமைகளை அனுபவித்து தியாகங்களை ஏற்றுக் கொண்டார்கள் என கூறினார்.
திமுகவை அழிக்க கனவு கான்கிறார்கள்
ஓராண்டு காலம் மிசா என்னும் கொடுமையான சட்டத்தில் திமுகவைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் மிசா ஏழுமலையும் கைது செய்யப்பட்டு எங்களுடன் சிறையில் இருந்ததாக குறிப்பிட்டார். இன்றைக்கு யார் யாரோ கிளம்பி வந்து திமுகவை அழித்து விடலாம் என கனவு கான்கிறார்கள்,திமுகவை எந்த காலத்திலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என உறுதியாக கூறினார்.
தேர்தல் நேரத்தில் நெருக்கடி
SIR -யை எதிர்த்து தமிழ்நாட்டில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி தீர்மானம் போடப்பட்டு அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம். சட்டப் போராட்டம் ஒரு பக்கம் நடந்தாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.எனவே திமுக தொண்டர்கள் நிர்வாகிகள் அதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
SIR -யை கண்டித்து வரும் 11ம் தேதி தமிழகத்தில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கூறிய அவர்,தேர்தல் நேரத்தில் எவ்வளவு பெரிய நெருக்கடி எல்லாம் வரும் என்று உங்களுக்கு தெரியும்.எனவே SIR தொடர்பாக எந்த சந்தேகம் இருந்தாலும் திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சந்தேகம் கேட்கலாம் என ஸ்டாலின் தெரிவித்தார்.