தமிழக வெற்றிக் கழகத்தின் 95 மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள், 5 கட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இறுதிகட்டமாக மாவட்ட செயலாளர்கள பட்டியலை நாளை வெளியிட உள்ளார். அக்கட்சியின் தலைவர் விஜய். இந்நிலையில், ஏற்கனே நியமிக்கப்பட்ட 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்வோம். 

தவெக_வின் 120 மாவட்டங்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே 5 கட்டங்களாக 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், தற்போது  மீதமுள்ள மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்படவுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய்  நாளை வெளியிடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ்நாட்டில் ,  தமிழக வெற்றிக் கழகம் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்துள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்திருக்கிறார். 

Also Read: திமுகவை வெளுக்கும் விஜய்.! வாய்வித்தையில் மட்டும் ஆடுது திமுக..திருமாவளவனை டேக் செய்த தவெக.!

மாவட்ட செயலாளர்கள் பட்டியல்:

இதுவரை, 95 மாவட்டங்களுக்கான மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும்,  நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. 

இதையடுத்து, மீதமுள்ள மாவட்டங்களுக்கான, மாவட்ட செயலாளர்கள் பட்டியலை நாளை, தவெக தலைவர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுவரை, 5 கட்டங்களாக 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யபட்டுள்ள நிலையில், பெயர் விவரங்களை தெரிண்த் கொள்ள, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். தவெக மாவட்ட நிர்வாகிகள் பட்டியல்