• TN Rain Alert: இன்று 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - லேட்டஸ்ட் அப்டேட்


இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க



  • சென்னையில் ரோட்ல ஸ்பீடா போகாதீங்க! ஒரே நாளில் எகிறிய அபராதம் - இனி கவனமா போங்க!


தலைநகர் சென்னையில் சாதாரணமாகவே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அதுவும் வார நாட்களில் பீக் நேரங்களில் சென்னை சாலைகளில் நிலையை பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு நெரிசால் அதிகமாக இருக்கும். வாகனங்கள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதை காண முடியும். இப்படி சாலைகளில் டிராபிக் அதிகரிப்பதால் விரைவாக ஒரு இடத்திற்குச் சென்று சேர முடியவில்லை. இதனால் சென்னையில் பலரும் வாகனங்களை அதிவேகமாக இயக்குகிறார்கள்.  இதனால் சென்னையில் வாகன விபத்துகள் ஏற்படுவது தொடர் கதையாகவே இருக்கிறது. மேலும் படிக்க



  • PTR Speech: நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இருந்த நிதி நெருக்கடி தற்போதும் இருக்கிறது - அமைச்சர் பி.டி.ஆர். பேச்சு


நெல்லை பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பொன்விழா ஆண்டு நிறைவு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் படிக்க



  • Ration Shops: மக்களே.. நெருங்கும் தீபாவளி பண்டிகை.. ரேஷன் கடைகள் இன்று இயங்கும் என அறிவிப்பு..


நாடு முழுவது  அனைத்து தரப்பு மக்களாலும் சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று “தீபாவளி’. நடப்பாண்டு இந்த பண்டிகை வரும் நவம்பர் 12 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடைவீதிகளில் புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேசமயம் முதல் பாதியிலிலே பண்டிகை வருவதால் மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மேலும் படிக்க



  • Aarudhra Case: டிசம்பர் 10ம் தேதி நாடு திரும்பும் ஆர். கே.சுரேஷ்! சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி வழக்கு!


ஆருத்ரா, ஹிஜாவு, ஐஎஃப்எஸ், எல்பின் உள்ளிட்ட 8 பெரிய நிதி நிறுவனங்கள் தமிழ்நாடு முழுவதும் 2.91 லட்சத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.14,168 கோடி வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மோசடி நிதி நிறுவன நிர்வாகிகள், முகவர்கள் உட்பட 45 பேரைக் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதில் ஆருத்ரா என்ற நிதி நிறுவனம் மட்டும்  1,09,285 முதலீட்டாளர்களிடமிருந்து 2,438 கோடி ரூபாய் மோசடி செய்தது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியது. மேலும் படிக்க