தமிழ்நாட்டில் காலை பொழுதில் கடும் குளிர் நிலவி வருகிறது. மதிய பொழுதில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த தருணத்தில் இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது வானிலை தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

கனமழை எச்சரிக்கை:

இந்திய வானிலை மையம் அறிக்கையின்படி, உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திரிபுரா, சிக்கிம் மற்றும் டார்ஜிலிங்கிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 16 மற்றும் 19 தேதிகளில் அசாம் மற்றும் மேகாலயாவில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த ஏழு தினங்களுக்கு , தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்தான தகவலை பார்ப்போம்

Continues below advertisement

16-02-2025 மற்றும் 17-02-2025:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

18-02-2025 முதல் 20-02-2025 வரை:

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

Also Read: iPhone 17: ஐபோன் 17 மாடல் லீக்கானது: இனி கேமரா வடிவமைப்பே மாறுகிறது..புகைப்படம் இதோ

21-02-2025 மற்றும் 22-02-2025: 

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை :

சென்னையை பொறுத்தவரை இன்று (16-02-2025), வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22 முதல் 23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: 

மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

இந்தியாவின் தென் பகுதியில் வெயில் வாட்டி வருகிறது, வட பகுதியில் கடும் பனிப் பொழிவு இருக்கிறது, சில பகுதிகளில் மழை பெய்கிறது என பன்முகத்தன்மை வானிலையுடன் இந்தியா திகழ்கிறது.