வங்க கடலில் இருக்கும் ஃபெஞ்சல் புயலானது, நாளைய தினம் ( Nov 30 ) காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கவுள்ள நிலையில்,  7 மாவட்டங்களின் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 


7 மாவட்டங்கள்:


பெஞ்சல் புயல் எதிரொலியால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. 


மேலும்  காஞ்சிபுரத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள நடத்தக்கூடாது எனவும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. 


இதனை தொடர்ந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு  நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 


மேலும் சுற்றுலா தளங்களான சென்னை மெரினா கடற்கரை , வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்டவைகள் புயல் எதிரொலியாக நாளை மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


மேலும், தனியார் நிறுவனங்கள் வீட்டிலிருந்தே பணிபுரியுமாறு, தமிழ்நாடு அரசின் சார்பில்  அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.