- தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை - சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம்
- நடப்பாண்டு குரூப்-4 தேர்வுக்கான பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
- கேரளாவில் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி - தமிழ்நாடு எல்லைகளில் தீவிர பரிசோதனை
- சென்னை மாநகராட்சி டெண்டர் முறைகேடு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு
- சென்னையில் நடைபெறும் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் - ரிஷப் பண்டிற்கு அணியில் வாய்ப்பு
- 28ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி திடலில் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பவள விழா பொதுக்கூட்டம்: மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆலோசனை
- கும்பகோணத்தில் ஓடும் பேருந்தில் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய 3 இளைஞர்கள் கைது - சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் நடவடிக்கை
- மதுவை ஒழிக்கும் அதிகாரத்தில் இருப்பவர்களை அழைத்து மது ஒழிப்பு மாநாடு - விசிகவிற்கு ஜி.கே. வாசன் கண்டனம்
- வத்திராயிருப்பைச் சேர்ந்த முருகக்கனி என்பவர் கோட்டையூர் அரசு ஆதிதிராவிடர் நல பள்ளிக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கல்வி சீர் வழங்கினார் - பீரோ, டேபிள், நாற்காலி உள்ளிட்ட பொருட்களை ஊர் மக்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக எடுத்துச் சென்று அசத்தினர்
- சென்னையில் மாமூல் கேட்டு மிரட்டிய 6 ரவுடிகளை பிடித்து சிறையில் அடைத்த போலீசார்
- மேற்கு வங்க இளைஞரை தமிழ்நாட்டில் திருமணம் செய்த அசாம் பெண்ணை, போலீசாருடன் வந்து அழைத்துச் செல்ல கடலூரில் காத்திருக்கும் தந்தை
- 2013ம் ஆண்டு அத்வானி மதுரை வருகையின் போது பைப் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டதாக கைதான, ஷாகிர் என்பவர் பூந்தமல்லி கிளைச்சிறையில் தற்கொலை முயற்சி
- திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார் - 15ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்ற மாணவி இதுவரை திரும்பவில்லை என தகவல்
Tamilnadu Roundup: தமிழகத்தில் கொளுத்தப்போகும் வெயில், சென்னை டெஸ்டில் இந்தியா பேட்டிங் - தமிழ்நாட்டில் தற்போது வரை
குலசேகரன் முனிரத்தினம்
Updated at:
19 Sep 2024 09:56 AM (IST)
Tamilnadu RoudUp: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
10 மணி தலைப்புச் செய்திகள்
NEXT
PREV
Published at:
19 Sep 2024 09:55 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -