தமிழ்நாட்டில் பல இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த 3 நாட்களுக்கு பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


நாளை, நாளை மறுநாள் வானிலை:


தமிழ்நாட்டில் நாளை ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. பிற மாவட்டங்களில் இயல்பான வானிலை நிலவும் என்றும் அறிவித்துள்ளது.


நாளை மறுநாளான 21ம் தேதி தமிழ்நாட்டின் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.






புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வாய்ப்பு:

மேலும், 24ம் தேதியான வரும் வாரம் வியாழக்கிழமை கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தொடர்ந்து மழை பரவலாக பெய்து வருகிறது. மழையின் காரணமாக பல இடங்களில் நீர்நிலைகளில் தண்ணீர் உயர்ந்து வருகிறது. அரசு சார்பில் வடகிழக்கு பருவமழைக்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


மேலும் வங்கக்கடலிலும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று கூறியிருப்பதால் அரசு அதன் தாக்கத்தையும் உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர்.