அமைச்சர் நாசர் மகன் ஆசிம் ராஜா அட்ராசிட்டி
ஆவடி புதிய மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் தனது மகன் ஆசிம் ராஜா - வை மேயராக்க வேண்டுமென எண்ணி , அதற்கான சில பல வேலைகளை செய்துள்ளார் நாசர். ஆனால் ஆவடி மேயர் பதவி பட்டியலினப் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உதயகுமார் மேயராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் சகலப் பணிகளை ஆசிம் ராஜா தான் கவனிப்பதாகவும் , மாநகராட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் ஆசிம் தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார் என கூறப்பட்டது.
கல்லால் அடித்த அமைச்சர் நாசர்
மாநகராட்சியில் வரும் டெண்டர்கள் , லேண்ட் அப்ரூவல் , வீட்டு மனைப் பட்டா, குடிநீர் சப்ளை என திருவள்ளூரை தன் கட்டுக்குள் வைத்ததாக சொல்லப்பட்டது. இது குறித்து தலைமையிடம் புகார்கள் சென்றன. அச்சமயத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் , பொறுப்பை மறந்து பொக்லைன் இயந்திரத்தை ஓட்டுவதும் , நிர்வாகிகளைக் கற்களாலும் , கையாலும் தாக்குவது என நாசரின் செயல்கள் வெளியே வந்தன. பின்பு சில நாட்களில் நாசரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு , அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதில் சிலருக்கு துறைகள் மாற்றப்பட்டது. சிலர் அமைச்சர் பொறப்பில் இருந்து நீக்கப்பட்டனர். ஒரு சில புதியவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. அதில் , நாசருக்கும் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
உறுப்பினர்கள் கூட்டம்
திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக சார்பில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் பங்கேற்கும் செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் ஒன்றிய செயலாளர் கமலேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அமைச்சர் நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமி மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.
இதையடுத்து அமைச்சர் நாசர் பேசுகையில் ;
நிகழ்ச்சிகளில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்த்து விடுங்கள் அதை வெடிக்க வேண்டாம் மக்களுக்கு நம் மீது கோபம் வரும் எனவும் அதற்கு பதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி விடலாம் , வரும் 21 - ம் தேதி தனக்கு பிறந்தநாள் என்றும் தன் மீது அன்பு , பாசம் வைத்திருப்பவர்கள் தயவு செய்து தனக்கு வாழ்த்து செய்தி வீடியோக்கள், படங்கள் எதையும் பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் அது தான் என்னை குளோஸ் பண்ண முழு காரணம் என இரு கைகளை கூப்பி கும்பிட்டபடி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசியது பரபரப்பை ஏற்படுகிறது.