தமிழ்நாட்டில் இன்று இரவு 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 






15 மாவட்டங்கள்:


கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை , நாமக்கல், சேலம், தருமபுரி, காரைக்கால், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நெல்லை மற்றும் குமரி ஆகிய 15 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


பருவமழை: 


தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே மழை பெய்து வருகிறது. வழக்கமாக செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்வது வழக்கம். குறிப்பாக, தமிழ்நாடு பெரும்பாலும் வடகிழக்கு பருவமழையே பெரிதும் நம்பியிருக்கிறது.


நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழையே தமிழ்நாட்டில் வழக்கத்தை விட அதிகளவு பெய்ததால், வடகிழக்கு பருவமழையும் அதிகளவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


மழை பெய்யும் பகுதிகளில் தண்ணீர் தேங்குவதற்கும், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 


சென்னை:


சென்னையை பொறுத்தவரை, அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 


Also Read: Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?