மக்களே கவனம்! இன்று இரவு 14 மாவட்டங்களில் மழை இருக்கு - வானிலை மையம்
Tamilnadu Weather Updates: தமிழ்நாட்டில் இன்று இரவு திருச்சி, கன்னியாகுமரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் இன்று இரவு பெரம்பலூர், திருச்சி, கோவை, விருதுநகர், சேலம், தஞ்சாவூர், நாமக்கல், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், அரியலூர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இரவு 10 மணிவரையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Also Read: Tamil New Year 2025: சித்திரையா, தையா: தமிழ் புத்தாண்டு எது? அறிவியல் சொல்வது என்ன?
Just In




அடுத்த ஏழு தினங்களுக்கு வானிலை:
தமிழ்நாட்டின் வானிலை குறித்து வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, “ கடலோர ஆந்திரா பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
15-04-2025 முதல் 19-04-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
13-04-2025 முதல் 17-04-2025 வரை: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை சற்று உயரக்கூடும். 13-04-2025 முதல் 15-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மேலும், 14-04-2025 மற்றும் 15-04-2025 ஆகிய நாட்களில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை வானிலை :
இன்று (18-04-2025); வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 38-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை (14.04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.