Just In





Tamil New Year 2025: டாப் 7 வாழ்த்துகள்: தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்லிட்டீங்களா!
Tamil New Year 2025 Wishes: தமிழ் புத்தாண்டு தினத்தில் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் உங்களுக்கு, வாழ்த்துகளை தொகுத்துள்ளோம்.

Tamil New Year 2025 Wishes: சித்திரை மாதத்தின் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படும் நிலையில் பலரும் தங்களது அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், உங்களுக்காக தமிழ் புத்தாண்டு வாழ்த்து புகைப்படங்கள் மற்றும் வாசகங்களை தொகுத்து வழங்குகிறோம்.
தமிழ் புத்தாண்டு 2025:
தமிழ் புத்தாண்டு என்பது தமிழர் ஆண்டின் தொடக்க நாளாகும். இது சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் சித்திரை மாதத்தின் முதல் நாளாகவும், இது தமிழ் நாட்காட்டியின் தொடக்க நாளாகவும் கருதப்படுகிறது உலகெங்கிலும் உள்ள தமிழர்களால், குறிப்பாக இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் மட்டுமன்றி இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தமிழ் சமூகங்களைக் கொண்ட நாடுகளிலும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான பண்டிகை புத்தாண்டாகும். சித்திரை மாதத்தின் முதல் நாளானது நம்பிக்கை மற்றும் செழிப்பைக் குறிக்கிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்து, வண்ணமயமான கோலங்களால் (ரங்கோலி) அலங்கரிக்கின்றனர். மேலும் புத்தாடைகளை அணிந்தும், உறவுகளுடன் அன்பை பகிர்ந்து மகிழ்ச்சியை பரிமாறிக் கொள்வார்கள்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்:
தமிழ்நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவில் பிற மாநிலங்களிலும் இதே நாளில், வெவ்வேறு பெயர்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது, கேரளாவில் (வைசு), பஞ்சாபில் ( பைசாகி ),மேற்கு வங்காளத்தில் ( போலா பொய்சாக் ) அஸ்ஸாமில் ( பிகு), ஒடிசாவில் ( சங்கிராந்தி ) ஆகிய மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில் இனிப்பு, புளிப்பு, காரம் என அனைத்து சுவைகளையும் பிரதிபலிக்கும் உணவுகள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் புத்தாண்டில் வாழ்த்துகளை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், உங்களுக்கான வாழ்த்துகளை தொகுத்து வழங்குகிறோம்.
டாப் 7 வாழ்த்துகள்:
1.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்,அமைதியும் நிரம்பி வாழ வாழ்த்துகள்.
2.தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்! இந்த புதிய ஆண்டில் உங்கள் எல்லா கனவுகளும் நிறைவேறட்டும்.
3.சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்! சூரியன் போல் வாழ்க்கை உங்களது வாழ்க்கை ஒளிமையாக இருக்கட்டும்.
4.உங்கள் வாழ்வில் நல்லது நடக்கட்டும்,எதிர்பாராத நன்மைகள் உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும்..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
5.இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்,உங்கள் வாழ்க்கை இனிமையும் அமைதியுமாகவும் வளமுடன் அமையட்டும்.
6.இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! பசுமை நிறைந்த எதிர்காலம் உங்கள் வசமாகட்டும்
7.உங்கள் ஒவ்வொரு நாளும் புதிய தொடக்கமாகவும், நல்ல மாற்றங்களுடனும் இருக்கட்டும்..இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!