நாட்டில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, ஆண்டுதோறும் குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கு ஆண்டுதோறும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
போலியோ சொட்டு மருந்து
1 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் போலியோ சொட்டு மருந்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான குழந்தைகள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடப்பாண்டிற்கான போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 4-ந் தேதி நடைபெறும் என்று சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி, இன்று மாநிலம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது
இதற்காக மாநிலம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் சிறப்பு சொட்டு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. குழந்தைகளுக்கு சொட்டு மருந்துகளை செலுத்திக் கொள்ளுமாறு ஏற்கனவே சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும், 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்:
தமிழ்நாட்டில் போலியோவின் தாக்கம் இல்லாவிட்டாலும் பிறந்த குழந்தைகளுக்கு 9வது மாதம் முதல் 12 மாதங்களுக்குள் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், விமான நிலையங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக ஆண்டுதோறும் 6வது வாரத்திலும் 14 வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாம் வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க: J&J License: கோவிட்-19 காலத்தில் அரசு செயல்படவில்லையா? ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி
மேலும் படிக்க: Heeraben Modi: தாயுடன் நீங்கள் கொண்டிருந்த உணர்வுப்பூர்வமான பிணைப்பை அறிவோம்... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்