நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். மேலும், தமிழக ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிக்கொண்ட தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்றத்தில் பேசிய தி.மு.க. மக்களவைத் தலைவர் டி.ஆர்.பாலு, ஐந்து மாதங்களாக முடிவெடுக்காமல் இருந்துவிட்டு திருப்பி அனுப்புவது எந்த வகையில் நியாயம்? தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பி இருப்பது அரசியல் சட்டவிரோதம். தவறான முன்னுதாரணம் என்று பேசினார். மேலும், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையற்றது என்ற மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் வாசகத்தையும் மேற்கோள் காட்டினார்.
மேலும் படிக்க : CN Annadurai : ’சொல் வாள் சுழற்றி களம் கண்ட அண்ணா’ ஒற்றையாட்சி முறையை முளையிலேயே எதிர்த்த கலகக்காரன்..!
மேலும், தமிழ்நாடு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தி.மு.க., காங்கிரஸ்., மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். முன்னதாக, கடந்தாண்டு தமிழக சட்டசபையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பட்டது.
ஆனால், செப்டம்பர் மாதம் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவை இதுநாள் வரை ஆளுநர் ஆர்.என்.ரவி குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமலே இருந்தார். அவரது செயலை கண்டித்து கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அவரது உரையின்போது வி.சி.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதும் தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்கள் தமிழக ஆளுநருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாவை மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்புவோம் என்று தி.மு.க. எம்.பி. வில்சன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக வரும் 5-ந் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
Watch video : மது பாட்டிலோடு பார் பெண்களுடன் டான்ஸ் ஆடிய முதியவர்.. கைது செய்த காவல்துறை.. ஏன்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்